Friday, July 21, 2017

How Lanka

அப்பலோ ரயர் அனுசரணையில் மோட்டார் சைக்கிள் கண்காட்சி


முன்னணி ரயர் உற்பத்தியாளரும் சுமார் 2 பில்லியன் அமெ. டொலரை வருடாந்த வருமானத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய ரயர்கள் ஏற்றுமதியாளரும் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் தொழிற்சாலையைக் கொண்டுள்ளதுமான “அப்பலோ ரயர்” நிறுவனம் மஹிந்ரா நிறுவனத்தினால் நடாத்தப்பெற்ற “ஐடியல் விஷன் ஓட்டோ லைப் ஸ்டைல்” எனும் தொனிப் பொருளில் அமைந்த கண்காட்சியில் பிரமிக்கத்தக்க மோட்டார் கண்காட்சியொன்றுடன் “அப்பலோ” இரு சக்கர ரயர் விற்பனையை ஆரம்பித்து வைத்ததன் மூலம் இலங்கைச் சந்தையில் தனது இருப்பை மிகுதிப்படுத்தியுள்ளது.
மேற்படி மோட்டார் கண்காட்சி 10,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட “மை போய்ஸ்”, “90 டிக்கிரிஸ்”, “ஸ்பின் றைடர்ஸ்” மற்றும் “பீ ஆர் சி” எனும் பெயர்களைக் கொண்டு நான்கு பிரசித்திபெற்ற மோட்டார் சைக்கிள் கழகங்களின் வீரர்கள் ஓட்டுநர்கள் கண்காட்சி நிகழ்த்தப்பட்டது. ஒவ்வொரு கழகத்திலிருந்தும் 16 ஓட்டுநர்கள் கலந்துகொண்ட இந்தக் கண்காட்சியில் அதிசிறந்த நான்கு ஓட்டுநர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.