ஜேர்மனியில் மர்மநபர்கள் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு ஜேர்மன், Hamburg பகுதியில் உள்ள சந்தையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
ஜேர்மன் நேரடிப்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் நபர் ஒருவர் Barmbek அருகில் உள்ள சந்தைக்குள் வேகமாக ஒடி வந்து கத்தியால் வாடிக்கையாளர்களை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வித எச்சரிக்கைகளையும் விடுக்காமல் குறித்த நபர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது ஒருவர் உயிரிந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் Heike Uhde தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் சந்தேகநபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். எனினும் அரை மணி நேரத்தில் குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த இரண்டாவது நபரை பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து பொது மக்களை வெளியேறுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த தாக்குதலுக்கான நோக்கம் என்ன என்பது குறித்து தமக்கு தெளிவான தகவல் கிடைக்கவில்லை என Hamburg பொலிஸார் டுவிட்டர் ஊடாக அறிவித்துள்ளனர்.