மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று (19) நள்ளிரவு இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் பல இடிந்து வீழ்ந்தன.
மத்திய மெக்சிகோவில் உள்ள மெக்சிகோ நகர், மொர்லோஸ், ப்யூப்லா மாநிலங்களிலேயே கட்டிடங்கள் பல இடிந்து வீழ்ந்ததாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
நிலநடுக்கத்தில் சிக்கி 226 பேர் பலியாகியுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதேவேளை, மெக்சிகோ நகரில் (மெக்சிகோ சிட்டி) உள்ள ஆரம்பப் பாடசாலையொன்று இடிந்து தரைமட்டமானதில் 21 சிறுவர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது