Tuesday, September 12, 2017

How Lanka

சசிகலா நீக்கம் - ஓ.பி.எஸ் அதிரடி


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனத்தை இரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாத்திரமே நிரந்தர பொது செயலாளர் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் அதிமுகவில் இனிவரும் காலங்களில் பொதுச் செயலாளர் எனும் பதவி இருக்காது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும்நீக்கப்பட்டுள்ளனர்.

பொதுச் செயலாளருக்கான அதிகாரங்கள் கட்சியின் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரத்தின் மூலம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கு பொதுக்குழுவில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் நிர்மாணிப்பதற்கான நிதியை ஒதுக்குவதற்கும் பொதுக்குழு கூட்டத்தில்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவளை டிடிவி தினகரின் ஆதரவாளர்கள் அமைதியின்மையை தோற்றுவிக்க கூடும் என்பதால் கூட்டம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.