பிரபஞ்சத்தில்
சுற்றி வரும் பிரமாண்டமான விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் எவ்வித
ஆபத்தும் இன்றி கடந்து சென்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
அண்டவெளியில் சூரியனை சுற்றி வரும் பூமியை போன்ற கோள்களை தவிர கோடிக்கணக்கான விண்கற்கலும் சுற்றி வருகின்றன.இந்த விண்கற்கல் அவ்வபோது பூமிக்கு மிக அருகில் கடந்து செல்வது வழக்கம்.
இதுபோன்ற ஒரு விண்கல் தான் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமி மீது மோதி டைனோசர்களின் இனத்தை பூண்டோடு அழித்தது.
பூமியை தாக்கிய இந்த விண்கல் சுமார் 9 கி.மீ நீளமுடையது ஆகும்
இந்நிலையில், ஃபுளோரன்ஸ் எனப்படும் விண்கல் ஒன்று வெள்ளிக்கிழமை(இன்று காலை 8 மணியளவில்) அன்று பூமிக்கு மிக அருகில் கடந்த செல்லும் என சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த விண்கல்லானது அறிவிக்கப்பட்டதுபோல் இன்று காலை எவ்வித ஆபத்தும் இன்றி பூமியை கடந்து சென்றுள்ளது.
சுமார் 4 கி.மீ நீளமுள்ள இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 4.4 மில்லியன் மைல்கள் தூரத்தில் கடந்து சென்றுள்ளது.
பூமிக்கு அருகில் சுற்றி வரும் விண்கற்கள் குறித்து நாசா ஆய்வை தொடங்கியதற்கு பின்னர் பூமிக்கு மிக அருகில் கடந்துள்ள மிகப்பெரிய விண்கல் தான் இந்த ஃபுளோரன்ஸ்.
ஆய்வு தொடங்கிய பின்னர் இந்த ஃபுளோரன்ஸ் விண்கல் கடந்த 1890-ம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் கடந்தது.
மேலும், இந்த விண்கல் அடுத்ததாக எதிர்வரும் 2500-ம் ஆண்டு மட்டுமே பூமிக்கு மிக அருகில் கடக்கும் என நாசா அறிவித்துள்ளது.