கிரிஎல்ல – இங்கிரிய பகுதியில் பவுசரொன்று குடைசாய்ந்ததில் அதிலிருந்த பெட்ரோல் களு கங்கையில் கலந்துள்ளது.இதன் காரணமாக ஹொரண மற்றும் கந்தன நீர் சுத்திகரிப்பு நிலையங்களின்
செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்
சபை தெரிவித்தது.
அதற்கமைய, மொரட்டுவ, பாணந்துறை, நல்லுருவ, கிரிபேரிய, கெசெல்வத்த, ரய்கம, பண்டாரகம, ஹொரண, கும்புக்க, மொரொந்தொட்டுவ ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கஹதுட்டுவ, மில்லனிய, பிலியந்தல, கெஸ்பேவ மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நீர் சுத்திரகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக, களுகங்கையில் கலந்துள்ள பெட்ரோல் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
களுகங்கையில் படிந்துள்ள எண்ணெய் படலம் அடித்துச் செல்லப்படாதிருக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டது