Thursday, September 28, 2017

How Lanka

முதலமைச்சர் விருது நிறுத்தப்பட்டது ஏன் எஸ்.சுகிர்தன் கேள்வி


வடமாகாண பண்பாட்டு விழாவில் முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டமை எதற்காக என வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஷ்வரன் தெளிவான அறிக்கை ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் கேட்டுள்ளார்.

வடமாகாணசபையின் 106வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, பண்பாட்டு விழா தொடர்பான விசேட கவனயீர்ப்பு ஒன்றை சபைக்கு சமர்பித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்த தெரிவிக்கையில்,

வடமாகாண பண்பாட்டு விழா கடந்த 22 ஆம், 23 ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி மேற்படி பண்பாட்டு விழாவை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும் பண்பாட்டு விழா பின்னர் நடத்தப்பட்டபோதும் அந்த விழாவில் ஒரு பகுதியாக சிறந்த கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு வழங்கப்படவிருந்த முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டது.

இதற்கான காரணம் முதலமைச்சர் விருது பெறுவதற்கான கலைஞர்கள், எழுத்தாளர்கள் தெரிவில் குறைபாடுகள் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மேற்படி முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டமையால் பல கலைஞர்கள், எழுத்தாளர்கள் கவலையடைந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

எனவே, முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்வு எதற்காக நிறுத்தப்பட்டது என்பது தொடர்பான தெளிவான அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என எஸ்.சுகிர்தன் குறிப்பிட்டுள்ளார்.