ஹட்டன் மேபீல்ட் தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையில் பரவிய தீயினால் பாரிய சேதம். இன்று (03) அதிகாலை பரவிய தீ ஒரு மணிநேரத்திற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தோட்ட மக்கள், பொலிஸார் மற்றும் தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
எவ்வாறாயினும் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை தூள் தீக்கிரையாகியுள்ளதுடன், இயந்திர உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, பருத்தித்துறை நகரிலுள்ள மதுபான சாலையொன்றிலும் இன்று (03) அதிகாலை தீ பரவியிருந்தது. இன்று அதிகாலை 3.30 அளவில் தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எவ்வாறாயினும் தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
பருத்தித்துறை நகரிலுள்ள இந்த மதுபான சாலையை அகற்றுமாறு கோரி, மக்கள் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.