மின்சாரத் தொகுதி பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் பூதன் வயல், முறிப்பு, தண்ணி முறிப்பு, குமுழமுனை, குமுழமுனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அரிசி ஆலை ஆகிய பகுதிகளிலும்,
இன்று காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் தவசிக்குளம் கிராமம், அட்டம்பஸ்கட கிராமம் ஆகிய பகுதிகளிலும்,
காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை மன்னார் மாவட்டத்தின் முருங்கன் பிரதேசத்திலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.