எமது யாழ் இளைஞர்களின் இன்றைய செயற்பாடு கண்டு பலரும் வேதனையடைகிறார்கள். லட்சக்கணக்கில் செலவிட்டு கூத்தாடிகளுக்கு பனர் கட்டுகிறார்கள். நாளைய தினம் நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படம் திரைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதியவர் ஓருவரின் வாயிலிருந்து.....
இப்படி பணம் செலவழிக்கும் இளைஞர்களில் எத்தனை பேர் தமது தாய் தந்தையருக்கு தீபாவளிக்கு புதிய ஆடைகள் எடுத்து கொடுத்திருப்பார்கள்?
மனைவிக்கு அல்லது வீட்டு தேவைக்கு பணம் கொடுத்திருப்பார்கள்?
வளர்ந்து வரும் இளம் தலைமுறைகளுக்கு வழிகாட்ட வேண்டிய இளைஞர்களின் இச் செயலால் தாம் வேதனையடைவதாகவும்
இப்படி வீண்விரையமாக்கும் பணத்தினை யுத்தம் நடைபெற்றதால் அங்கவீனமுற்று அன்றாடம் உணவிற்கு கடினப்படும் ஏழைகளுக்க கொடுத்து உதவிடலாமே என....எங்களிடம் முதியவர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.