மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் மூன்றாம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் லங்காநாத திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் கடற்பரப்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று முற்பகல் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் 6 ட்ரோலர் படகுகள், பழுது பார்க்கப்பட்டதை அடுத்து மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந் இந்திய மீனவர்களின் 32 படகுககள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.