Saturday, October 21, 2017

How Lanka

அதிரடி திருப்பங்கள் - ஜனாதிபதி வித்தியாவின் வீட்டிற்கு விஜயம்


படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் வீட்டிற்கு சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வித்தியாவின் பெற்றோரை சந்தித்துள்ளார்.

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் ஏழுபேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இரண்டு வருடங்களாக நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.


படுகொலை செய்யப்பட்ட தனது மகளின் வழக்கை, துரிதப்படுத்தி நீதியை நிலைநாட்டுவதற்கு ஜனாதிபதி வழங்கிய ஆதரவுக்கு வித்தியாவின் தாயார் இதன் போது தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இதன்போது வித்தியாவின் மூத்த சகோதரியின் உயர் கல்வி மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியா சைவப்பிரகாசம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிலமெஹவர வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.