Friday, October 20, 2017

How Lanka

ஏறாவூர் இரட்டைப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள்


மட்டக்களப்பு – ஏறாவூர் இரட்டைப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நீதியை நிலைநாட்டக் கோரியும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஏறாவூர் – சவுக்கடி பகுதியைச் சேர்ந்த தாயும் மகனும் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் இன்று இரு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

சக மாணவனின் உயிரிழப்பு தொடர்பில் நீதியை நிலைநாட்டக் கோரி ஏறாவூர் கலைமகள் வித்தியாலய மாணவர்களும் இன்று கண்டனப் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை, சந்தேகநபர்களைக் கைது செய்யக்கோரியும், எதிர்காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் நடைபெறாமலிருப்பதை வலியுறுத்தியும் ஏறாவூர் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏறாவூர் பள்ளிவாசல் நிர்வாகமும் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.