அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கல்லூரியில் படித்த காலத்தில் முதன்முறையாக அலெக்ஸாண்ட்ரா என்ற பெண்ணைக் காதலித்தார்.
கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் அவருக்கு பல கடிதங்களை ஒபாமா எழுதியுள்ளார்.
அவற்றில் 9 கடிதங்கள் மட்டும் காதல் கடிதங்கள் ஆகும். அதில் அலெக்ஸாண்ட்ராவை உருகி உருகி வர்ணித்திருக்கிறார்.
அந்தக் கடிதங்கள் மூலம் அவரின் தீவிர காதலை புரிந்துகொள்ள முடியும்.
குறித்த கடிதங்கள் 30-க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்டவை.
இவை அனைத்தும் அட்லாண்டா பல்கலைக்கழகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை ஒபாமா தனது குடும்பத்துடன் கலந்தாலோசித்துவிட்டு வழங்கியிருக்கிறார்.
மேலும், இக்கடிதங்களில் தான் பட்ட பொருளாதாரக் கஷ்டங்கள், கறுப்பினராகப் பிறந்ததால் பட்ட துயரங்கள், அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விகள், என அனைத்தையும் எழுதியுள்ளார்.
ஒபாமாவின் கடிதங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவர் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை எழுத பலர் ஆர்வமாக உள்ளனர்.