Friday, October 20, 2017

How Lanka

ரயில்வே ஊழியர்கள் திட்டமிட்டிருந்த பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது


ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த தொடர் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாப்பாளர்கள், சாரதிகள் மற்றும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.


எனினும், பிரதி போக்குவரத்து அமைச்சருடன் இன்று பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து, பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிடுவதற்கு தீர்மானித்ததாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன தெரிவித்தார்.

தமது பிரச்சினை குறித்து ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தி உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக பிரதியமைச்சர் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

பிரதியமைச்சர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.