நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் வீட்டில் 24 வயதான திஸாநாயக்க முதியஸ்செலாகே லஹிரு ஜனித் திஸாநாயக்க என்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இவருடைய மரணம் குறித்து பல சர்ச்சைகள் எழும்பியிருந்த நிலையில், முதலில் இயற்கையான மரணம் எனவும் பின்னர் கொலை என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
மேலும், விமலின் மகனும், உயிரிழந்த இளைஞனான லஹிருவும் மிக நெருக்கமான நண்பர்கள்.
லஹிருவிக்கும் விமல் வீரவன்சவின் மகளுக்கும் ஏற்கனவே காதல் தொடர்பு இருந்ததாகவும் அதன் காரணமாக விமலின் மகனான விபுதி விஷ்வஜிதவிற்கும், லஹிருவுக்கும் முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் லஹிருவின் நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த மரணத்தில் விமலின் மனைவி சசிவீரவங்சவுக்கும் தொடர்புகள் இருந்ததாக செய்திகள் வெளிவந்தன.
தனது மகன் வீட்டில் இருந்து செல்லும் போது மிகவும் ஆரோக்கியமான உடல் நிலையிலேயே காணப்பட்டார் என உயிரிழந்த லஹிருவின் தாயார் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, பிரேதபரிசோதனை அறிக்கையின் படி இளைஞரின் மரணம் இயற்கையான மரணம் அல்ல எனவும் சந்தேகத்திற்குரிய மரணம் என கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அறிவித்திருந்தார்.
இதையடுத்து மேலதிக பரிசோதனைக்காக சடலத்தின் பாகங்களை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் அனுப்புவதற்கு சட்ட வைத்திய அதிகாரி அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், விமலின் வீட்டில் நடைபெற்ற மரணம் குறித்து பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கடுமையாக விமர்சித்திருந்ததுடன், விமல் வீரவங்கவின் மனைவி சசிவீரவங்க மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
தற்போது இந்த விடயம் பூதாகரமாக மாறியுள்ளது. லஹிருவின் பிரேதபரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், அவருடைய மரணம் இயற்கையான மரணம் என தெரியவந்துள்ளது.
லஹிருவின் அனைத்து பாகங்களும் பகுப்பாய்வு செய்து பிரேத பரிசோதனையில் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.