வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் தீபாவளியை இன்று கொண்டாடினார்.
இதன்போது, விஞ்ஞான, மருத்துவ மற்றும் கல்வித்துறைகளில் இந்திய அமெரிக்கர்கள் ஆற்றும் அசாதாரணப் பங்களிப்பை டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
இந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் ட்ரம்பின் மகள் இவாங்கா, நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்புகளை வகித்துவரும் இந்திய அமெரிக்க அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் அதிபராக கடந்த 2008 ஆம் ஆண்டு பதவியேற்ற பராக் ஒபாமா, கடந்த 2009 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் முதன்முதலாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.
அதனைத் தொடர்ந்து அங்கு தீபாவளி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.