Monday, October 23, 2017

How Lanka

இலங்கை அணியின் நிலை படுமோசம் - வெள்ளையடித்தது பாகிஸ்தான்


உஸ்மான் கானின் அபாரமான பந்துவீச்சிற்கு முகங்கொடுக்க முடியாமல் இலங்கை 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் ஜந்தாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 104 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அறிமுக பந்து வீச்சாளர்  உஸ்மான் 21 பந்துகளுக்குள் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இலங்கை அணியின் முன்னனி துடுப்பாட்ட வீரர்கள் கூட ஒற்றை இலக்க ரண்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினர்.


சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 20.2  ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றதுடன் இலங்கை அணியை முழு வெள்ளையடிப்பு செய்தது.


சமீப காலமாக இலங்கை அணியின்  விளையாட்டு  தொடர்பாக அனைவரும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது