காரைதீவு கடலில் நேற்றும் இன்றுமாக பெருந்தொகையான கீரிமீன்கள் பிடிபட்டதால் அப்பகுதி மீனவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
நீண்ட காலத்திற்குப்பிறகு இவ்விதம் கீரிமீன்கள் பிடிபட்டதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று பிடிப்பட்ட குறித்த கீரிமீன்கள் பல இலட்சம் ரூபாவுக்கு விலைபோயுள்ளன.
சில மீன் வலைகள் உடைப்பெடுத்த காரணத்தினால் பொதுமக்கள் சாக்குகளில் மீன்களை கட்டிக்கொண்டு சென்றனர்.
மொத்தத்தில் காரைதீவு கடற்கரை நேற்று கீரிமீன் மழையாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கிலோ கீரிமீன் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது என்று பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.
இதன் மூலம் மீனவர்களினதும் மீன் வியாபாரிகளினதும் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களில் அதிகமானவை குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்டதோடு கருவாடுகளுக்காக பீப்பாய்களில் அடைக்கப்பட்டும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களுக்கு வியாபாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.