Tuesday, October 3, 2017

How Lanka

தாதியதுறையில் வேலைவாய்பு - வடபகுதி இளைஞர் யுவதிகளுக்கு அரிய சந்தர்பம்


உயர்தர பரீட்சையில் 3 சித்தியடைந்தவர்களும் சாதாரண தரப்பரீட்சையில் 6 பாடம் சித்தியடைந்தவர்களும் தாதியர்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க விரும்புவர்கள் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளரும் உப தலைவருமான பாலசிங்கம் சிவயோகம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

வடமாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் உயிரியல் மற்றும் கணிதம் உட்பட 3 பாடங்களில் சித்தியடைந்தவர்களும், சாதாரண தரப்பரீட்சையில் தமிழ், கணிதம், ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட 6 பாடங்களில் சித்தியடைந்தவர்கள் தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.

தாதியராக விரும்புபவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய சங்கத் தலைவர் பாலசிங்கம் சிவயோகம் 0713526234 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக 18 வயது முதல் 28 வயதுடைய தாதிய பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பியவர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.