Monday, October 2, 2017

How Lanka

அமெரிக்கா கதிகலங்கியுள்ளது - சற்று முன் 50 பேர் சுட்டுக் கொலை

அமெரிக்க லாஸ் வேகஸ் நகரில், பெரும் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று 2 மணி நேரத்திற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. இசை நிகழ்ச்சி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியல் சுட்டதில் 50 பேர் பலியாகியுள்ளதோடு. 406 பேர் படுகாயமடைந்துள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இச் செய்தி காட்டு தீ போலப் பரவி அமெரிக்காவையே உலுப்பியுள்ளது.


இதற்க்கும் பயங்கரவாத தாக்குதலுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என முதல் கட்டமாக பொலிசார் அறிவித்துள்ளார்கள். சுட்ட நபரை பொலிசார் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். இருப்பினும் அவர் பல தடவை துப்பாகியால் சுட்டு பொதுமக்களை கொன்றுவிட்டார்.

இசை நிகழ்வு நடந்த வேளையில் அங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்துள்ளார்கள்.
இவர் இவ்வாறு நடந்து கொள்ள என்ன காரணம் என்று தமக்கு தெரியவில்லை என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளார்கள்.


துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரின் வயது 64 என்றும். இவர் சரியான மன நிலையில் காணப்பட்டதாகவும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளார்கள். ஆனால் எதுவுமே புரியாத புதிராக உள்ளது.