2018ஆம் ஆண்டில் இலங்கையர் ஒருவர் ஒரு இலட்சம் ரூபாவுக்கு கடனாளியாக இருப்பார்கள் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
2018 வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இந்த கடனானது அடுத்த வருடத்தில் கடன்கொடுத்தோருக்கு திருப்பிச்செலுத்தவேண்டிய தொகையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பெருமளவு கடனை பெறுகின்றபோதும் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படுவதில்லை என்று பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும், அரசாங்கம் 1970 பில்லியன் ரூபாய்களை திருப்பிச் செலுத்தவேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் பெற்ற 85 பில்லியன் ரூபாய்களாகும் எஞ்சியவை, நடைமுறை அரசாங்கம், பெற்றோல் டீசலுக்காக வழங்கிய தொகையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மத்தள விமான நிலையத்தையும் அபிவிருத்தி செய்தமையை காட்டிலும் கட்டுநாயக்க விமானநிலையத்தை அபிவிருத்தி செய்திருந்தால், நாட்டுக்கு இலாபம் கிடைத்திருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளா