சபை நாளை காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நாளை இடம்பெறும்.
05.41 வரவு செலவுத் திட்ட உரை நிறைவு
05.40 2018 ஏப்ரல் மாதம் முதல் SMS ஊடான வர்த்தக நடவடிக்கைகளின் போது SMS ஒன்றிற்கு 25 சதம் வரி அறவிட நடவடிக்கை
05.38 2018 ஏப்ரல் மாதம் முதல் வங்கியூடான கொடுக்கல் வாங்கல்களின் போது 1000 ரூபாவிற்கு 20 சதம் விசேட வரி அறவிட நடவடிக்கை
05.37 சுங்க கட்டளை சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
05.34 இவ்வருடத்தில் மட்டும் 1.9 ட்ரில்லியன் ரூபா அரச கடன் மீள செலுத்தப்பட்டுள்ளது.
05.34 நாடளாவிய ரீதியில் சலுகை விலை விற்பனை நிலையங்களை அமைக்க நடவடிக்கை
05.33 நேற்று நள்ளிரவு முதல் விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை, விலை குறைப்பிற்கு அமைவாக விற்பனை செய்யுமாறு வர்த்தகர்களுக்கு அறிவித்தல் விடுத்தார் நிதியமைச்சர்.
05. 28 காணாமல் போனோருக்கான அலுவலகத்திற்காக 1.4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு, இவ்வாண்டிற்குள் அமைக்கப்படும்.
05.27 நவீன பொருளாதார மத்திய நிலையம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும்.
05.23 தற்போது அரச சேவையில் உள்ளோருக்கு வழங்கப்படும் அக்ரஹார காப்புறுதித் திட்டம் 2016 இற்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்கப்படும்.
05.21 500க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அரச நிறுவனங்களில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிறுவத் திட்டம்
05.16 சிவனொளிபாத மலை, முன்னேஸ்வரம், கோணேஸ்வரம், மடு ஆகிய வழிபாட்டுத்தளங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
05.14 மண்சரிவு அபாயம் காரணமாக இரத்தினபுரி, வெலிமடை பகுதிகளில் உள்ள நீதிமன்ற கட்டடங்களை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை
05.13 சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளைக் கொண்டு செல்லும் பிரத்தியேக வாகனங்களைக் கொள்வனவு செய்யத் திட்டம்.
05.11 நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் விசாரணை செய்ய விசேட தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நீதிமன்றம் அமைக்கப்படும். – 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
05.09 பொலிஸ் மற்றும் குற்றவியல் கற்கை நெறிக்காக விசேட பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
05.07 கிராமிய அபிவிருத்திக்காக 4000 மில்லியன் ஒதுக்கீடு
ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க 750 மில்லியன் ஒதுக்கீடு
05.06 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட ஆயுட்காப்புறுதி.
05.06 நகர அபிவிருத்திக்காக 24 பில்லியன் ஒதுக்கீடு
05.05 வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்க 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
2018 முதல் 2020 ஆம் ஆண்டிற்குள் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை.
லயன் அறைகளில் வசிப்போருக்கான 25,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம். இதற்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
05.00 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் மதுபானங்களுக்கு NBT வரி விதிக்க தீர்மானம்
04.59 தற்கொலைகளைக் குறைப்பதற்கான உளவியல் ஆலோசனைகளை வழங்க 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
04.57 மாணவர்கள் மத்தியில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் உள்ளடக்கத்திற்கு அமைவாக 1 கிராம் சீனிக்கு 50 சதம் உற்பத்தி வரி இன்று நள்ளிரவு முதல் விதிக்கப்படும்.
04.55 சிறுநீரக நோயாளிகளின் நலன் கருதி யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று வைத்தியசாலைகளில் விசேட மருத்துவக் கருவிகளைப் பொருத்த நடவடிக்கை
04.54 விளையாட்டு வீரர்களுக்கான காலணிகளுக்கான இறக்குமதி வரியை இன்று நள்ளிரவு முதல் நீக்க நடவடிக்கை
04.52 சுதேச வைத்திய பட்டப்பின் படிப்பிற்காக விசேட கற்கை நிறுவனம் அமைக்கப்படும்.
மகாபொல பெறும் பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தினால் அதிகரிக்கப்படும்.
100 கிராமிய விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்காக 100 மில்லியன் ஒதுக்கப்படும்.
04.48 சப்ரகமுவ, மொரட்டுவ, வயம்ப பல்கலைக்கழகங்களில் மருத்துவப்பீடங்களை அமைக்க 1250 மில்லியன் ஒதுக்கீடு.
04.46 ஆசிரியர் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை 3500 ரூபாவிலிருந்து 5000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
04.45 எதிர்கால தொழிற்சந்தைக்கு ஏற்றவாறு பாடசாலை மாணவர்களைத் தயார்படுத்த பாடவிதானத்தில் ரோபோ மற்றும் நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடநெறிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
04.42 தொழிலாளர் திறன் அபிவிருத்திக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
04.41 பதுளை, கண்டி, திருகோணமலை, அநுராதபுரம், இரத்தினபுரி ஆகிய இடங்களில் ஜெர்மன் தொழில்நுட்பக் கல்லூரிகளை நிறுவி, உயர் தரத்திலான பாடநெறிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
04.35 பிட்டிபன பகுதியில் உயர் தொழில்நுட்ப புத்தாக்கப் பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
04.34 2018 மே முதலாம் திகதி முதல் வௌிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்போருக்கு பெறுமதிசேர் வரி மீளளிக்கப்படும்.
04.33 முச்சக்கரவண்டிகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை நிறுவப்படும். முச்சக்கரவண்டிகளுக்கான மானி கட்டாயமாக்கப்படும். Tourist Board Approved Tuk Tuk திட்டத்தின் கீழ் முச்சக்கரவண்டி சாரதிகளைப் பதிவு செய்து, சுற்றுலாத்துறையில் சாரதிகளை ஈடுபடுத்த அவர்களுக்கு வழிகாட்டல் பயிற்சியளிக்கப்படும்.
04.28 மின்சார விளையாட்டு வாகனங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும்
04.26 கொழும்பு, நானு ஓயா, எல்ல புகையிரத நிலையங்கள் தொல்லியல் பெறுமதி வாய்ந்த நிலையங்களாகப் பெயரிடப்படும்
04.24 2025 ஆம் ஆண்டளவில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மூன்று மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
04.22 அண்ணாசி மற்றும் வாழைக்கன்றுகளை உருவாக்கும் விசேட ஆய்வு நிலையங்கள் உருவாக்கப்படும்.
04.20 கறுவா மற்றும் மிளகு அபிவிருத்தித் திட்டங்களுக்காக 50 மில்லியன் ஒதுக்கீடு
04.19 தென்னங்கன்று விநியோகத்திற்கு 25 மில்லியன் ஒதுக்கீடு
04.18 சிறு தேயிலைத்தோட்ட அபிவிருத்திக்கு 250 மில்லியன் ஒதுக்கீடு
04.15 வௌிநாட்டு சந்தைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு (Export Market Support Programme ) 800 மில்லியன் ஒதுக்கீடு
04.13 சுதந்திர பொருளாதார ஒப்பந்தங்கள் உள்ளூர் வர்த்தகங்களுக்கு அச்சுறுத்தலாக அமையாது.
04.08 நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டைக் குறைக்க 75 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
04.05 பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு சலுகையுடனான (10% வட்டி நிவாரணம்) கடன் வசதி வழங்கப்படும்
03.57 கிளிநொச்சி – பூநகரி பகுதியில் கடலட்டை ஏற்றுமதி தொழிலில் ஈடுபடும் தனியாருக்கு அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்படும்.
03.54 சிலாபம், மிரிஸ்ஸ, காரைநகர் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
03.51 காலநிலை அவதான நிலையத்தினை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
03.50 பொலன்னறுவை, கிளிநொச்சி, இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் நெற்களஞ்சியசாலைகளின் நிர்மாணப் பணிகளை விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
03.47 நந்திக்கடல், நாயாறு உள்ளிட்ட 10 கலப்புகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
03.44 மிருகக்காட்சி சாலைகளில் மிருகங்களை கூண்டுகளில் அடைக்காமல் திறந்தவௌியில் பராமரிக்கும் வகையிலான திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பின்னவல யானைகள் சரணாலயம் புனரமைக்கப்படும்.
03.43 கழிவுப்பொருள் முகாமைத்துவம் இயற்கையைப் பாதிக்காத வகையில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்
03.41 மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டிகள் மற்றும் பஸ்களுக்கு வரி மானியம் வழங்கப்படும்
03.39 2025 ஆம் ஆண்டளவில் அனைத்து அரச வாகனங்களும் Hybrid அல்லது இலத்திரனியல் வாகனங்களாக மாற்றப்படும்.
03.38 மின்சாரத்தில் இயங்கும் 50 பஸ்களை கொள்வனவு செய்ய இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
03.37 மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்காக நாடளாவிய ரீதியில் 63 charging point – களை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2500 cc க்கு மேற்பட்ட வாகனங்களுக்கு அதிசொகுசு வரி விதிக்க தீர்மானம்.
03.34 தற்போது முச்சக்கரவண்டிகளை வைத்திருப்போர் அவற்றை பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய முடியும். Air Bag இல்லாத வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும்.
03.33 டீசலில் இயங்கும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 50 ஆயிரத்தால் அதிகரிக்கப்படும்
03.32 மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கான இறக்குமதி வரி 10 இலட்சம் ரூபாவால் குறைக்கப்படும்
03.29 2040 ஆம் ஆண்டளவில் நாட்டின் பாவனையில் உள்ள அனைத்து வாகனங்களையும் பெட்ரோலிய எரிபொருள் பாவனையற்றவையாக மாற்றும் திட்டம் உள்ளது – நிதியமைச்சர்
03.27 பழமைவாய்ந்த பொருளாதாரத்துடன் தொடர்புடைய சட்டங்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
03.25 பணவீக்கத்தை 6 வீதத்தை விட குறைவாகப் பேண நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
03.21 Enterprise Sri Lanka என்ற தொனிப்பொருளில் 2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாம் சமர்ப்பிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
03.21 அரசாங்கம் என்ற ரீதியில் பொருளாதாரத்தில் தீர்க்கமானதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது – நிதியமைச்சர்
03.08 வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்தார் நிதியமைச்சர்
03.06 நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றம் வருகை
03.01 வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது.