Tuesday, November 7, 2017

How Lanka

மழையின் திருவிளையாடல் 6 ஓட்டங்களால் நியூசிலாந்து தோல்வி


நியூசிலாந்து எதிரான கடைசி மற்றும் 3வது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3 வது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 67 ஓட்டங்கள் எடுத்தது.

முன்னதாக நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் தொடரை வெல்ல இப்போட்டி முக்கியமானதாக கருதப்பட்டது.
இந்த நிலையில் மழையினால் ஆட்டம் துவங்குவதில் தாமதமானதால், போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்திய அணியில் சிராஜ், அக்‌ஷர் படேல் ஆகியோருக்கு பதில் மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் சவுத்தி அணிக்கு திரும்பினார்.