Tuesday, November 14, 2017

How Lanka

நாட்டில் 45,000 இற்கும் அதிகமானவர்கள் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாம்

நாட்டில், 45,000 இற்கும் அதிகமானோர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களும் அடங்குவதாக அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் குமார குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் உயர்மட்டத்தில் வாழும் பெண்களில் சிலர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமை ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பாலியல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் பெண்கள் அனைவரும் ஹேரோய்ன் உள்ளிட்ட போதைபொருளுக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.