Wednesday, November 15, 2017

How Lanka

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் சேதம் - போக்குவரத்தில் சிக்கல்


முல்லைத்தீவு - வட்டுவாகல் ஏ35 பிரதான வீதியின் பாலம் தாள் இறங்கி சேதமாகியுள்ளது.

இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த தாள் இறக்கத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பாலத்தினூடாக பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் இறங்கி நடந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதேவேளை குறித்த பாலத்தின் சேதத்தை நேரில் சென்று பார்வையிட்ட கரைதுரைபற்று செயலாளர் குணபாலன் குறித்த பாலத்தை தற்காலிகமாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

குறித்த பாலமானது நீண்டகாலமாக சேதமடைந்திருந்து ஒருவழி பாதையாகவே பயன்படுத்தபட்டு வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த பாலத்தின் நடுப்பகுதியில் வெடிப்பு ஒன்று ஏற்பட்டது.

இதன்காரனமாக முல்லைதீவிலிருந்து யாழ்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பேருந்துக்களும் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது