Wednesday, November 22, 2017

How Lanka

இலங்கையில் ஒரு குடும்பம் சாரசி வாழ்கை வாழ்வதற்கு மாதம் 77,337 ரூபாய் தேவையாம்


2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒரு மாதத்திற்கு அரிசி மற்றும் தேங்காய்க்கு மட்டுமே 9,000 ரூபாய் தேவைப்படுகின்றது.

நாம் வீட்டுக்கு கூலி கட்டாமல், கடன் கட்டாமல், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு பணம் கொடுக்காமல், மருந்து எடுக்காமல், மரக்கறிகளை உண்ணாமல், பயணங்கள் மேற்கொள்ளாமல், வீட்டில் இருந்து தேங்காய் மற்றும் சோறு மட்டும் உண்ண வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சாதாரண ஒரு நபருக்கு மாதம் 15,000 - 20,000 வரையே சம்பளம் கிடைக்கின்றது. 4 பேரைக்கொண்ட குடும்பத்திற்கு அரிசி மற்றும் தேங்காய்க்கே 12,000 வரை செலவாகின்றது என்றால் எவ்வாறு உயிர்வாழ்வது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் நகர்பகுதிகளில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் வாழ்வதற்கு மாதம் 77,337 ரூபாய் தேவைப்படும் என்றும், கிராமப்புறங்களில் ஒரு குடும்பத்திற்கு மாதம் 51,373 ரூபாய் தேவைப்படுவதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

ஆனால் சாதாரண குடிமகனுக்கு இந்த வருமானம் கிடைக்கின்றதா? எனவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.