யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 'என்னென்ன கொடி ஏற்றப்படும்” என புலனாய்வாளர்கள் விசாரித்தமையினால் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், கொடிகள் ஏற்றாமலேயே நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். வல்வெட்டித்துறை அமெரிக்க மிஷன் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட அதிபர்களுக்கான விடுதி திறப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நேற்று நடைபெற்றுள்ளன.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாடு மற்றும் கலை கலாச்சார இளைஞர்கள் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வின் போது, பாடசாலைக்குச் சென்ற 6 புலனாய்வாளர்கள், நிகழ்வின் போது, என்னென்ன கொடிகள் ஏற்றப்படவுள்ளன என விசாரித்துள்ளனர்.
புலனாய்வாளர்கள் விசாரித்ததனால், நிகழ்வில் எந்தவொரு கொடிகளையும் ஏற்றாது, நிகழ்வினை நடத்தியுள்ளனர்.
மேலும், நிகழ்வின் போது கல்வி அமைச்சரின் உரைகளை பதிவு செய்ததுடன், நிகழ்வினையும் புகைப்படம் எடுத்துச் சென்றதாகவும், நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.