மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் குளிக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் காணாமற்போன, 8 பேரில், 7 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (04) மாலை ஐவரின் சடலங்கள் மீட்கபபட்டமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களில் 38 வயது மற்றும் 59 வயதான இரண்டு பெண்களும், 40 மற்றும் 38 வயதான ஆண்களும் , இரண்டு சிறுமிகளும் அடங்குகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தம்புளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
நாத்தாண்டியவிலிருந்து வருகை தந்த 12 பேரில் 8 பேர் தெல்கமுவ ஓயாவில் குளிப்பதற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே நேற்று பிற்பகல் 2 மணியளவில் நீரில் அடிச்செல்லப்பட்டனர்.
இதேவேளை மழையுடன் கூடிய வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் ஆறுகளில் குளிப்பதை தவிர்க்குமாறு இடர்முகாமைத்துவ நிலையம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
மாத்தளையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்து காணாமல்போயிருந்த மூன்று சிறுமிகளில் இருவரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை காணாமல் போயிருந்த மூன்று சிறுமிகளில் ஒருவரின் சடலம், சம்பவ இடத்திலிருந்து 4 கிலோமீற்றர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய இரு சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இன்னுமொரு சிறுமியின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.
தற்பொழுது எஞ்சியுள்ள ஒரு சிறுமியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமற் போனவர்களின் பெயர்கள்
கிங்சிலி ரத்நாயக்க (வயது – 40)
சந்திராகாந்தி (வயது - 59)
வினுக்கி ரத்நாயக்க (வயது – 13)
ஹிருனி ரத்நாயக்க (வயது - 4)
ரவிந்திர லசந்த (வயது – 39)
ருவனி டில்ருக்ஷி (வயது – 38)
ரிஷாதி வீகிஷா (வயது - 12)
சந்துனி (வயது – 12)