Sunday, November 5, 2017

How Lanka

பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் காயம்


ஹற்றன் போடைஸ் பகுதியில் இன்று பிற்பகல் பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இடம்பெற்ற பகுதியில் கூடிய மக்கள் வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டயகம நகரிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பிரதான வீதியிலுள்ள பள்ளத்திலேயே பஸ் வீழ்ந்துள்ளது.

இன்று பிற்பகல் 3.15 மணியளவில் என்.சீ தோட்டப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் 17 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 21 பேரும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த விபத்தையடுத்து, டயகம போடைஸ் வீதியைப் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி பிரதேசவாசிகள் ஆர்ப்பட்டம் நடத்தியுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து சுமார் 2 மணித்தியாளங்கள் தடைப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.