இன்று (13) முதல் விரிவுரைகளுக்கு சமூகமளிக்குமாறு மருத்துவபீட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சைட்டம் தொடர்பில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய இந்த அழைப்பை விடுத்துள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும், இன்று முதல் மருத்துவ பீடத்திற்கான கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர்களின் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய 8 மருத்துவ பீடங்களின் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
சைட்டம் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி கடந்த 10 மாதங்களுக்கு மேலாக மருத்துவபீட மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விடயமானது எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என பேராசிரியர் ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சைட்டம் நிறுவனத்தை இந்த வருடத்துடன் இரத்து செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானம் தொடர்பில் அரச மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடனும், சைட்டம் நிறுவனத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுடனும் கலந்துரையாடியுள்ளதாக பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.