யாழ். பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (13) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதற்கமைய கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் இன்று மீள திறக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழகத்தின் பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த பீடங்களை சேர்ந்த மாணவர்கள் இன்றைய தினத்திற்குள் தமது விடுதிகளுக்கு திரும்புமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.
இதேவேளை, வகுப்பு பகிஷ்கரிப்பிலும் மாணவர்கள் ஈடுபட்டனர்.
இதன்போது யாழ். பல்கலைக்கழகத்தின் கலை, மருத்துவம் மற்றும் முகாமைத்துவ பீடங்களின் கல்வி செயற்பாடுகள் பல்கலைக்கழக நிருவாகத்தால் கடந்த 31ம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.