Sunday, November 5, 2017

How Lanka

கட்சி உறுப்பினர்களுக்கிடையில் மோதல் - மோசடி அம்பலம் முல்லைதீவில் சம்பவம்


இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் சிலர் இன்று முல்லைதீவு நகரப் பகுதியில் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு அசாதாரண நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைதீவு - மூலக்கிளை தெரிவு கூட்டம் ஒன்று இன்று முல்லைதீவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.


குறித்த கூட்டத்திற்கு தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட பலர் வருகை தந்துள்ளனர்.

ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த கூட்டம் காலை ஆரம்பமாகி 12.30 மணியளவில் நிறைவு பெற்றுள்ளது.


முல்லைத்தீவு நகரில் இன்று நடைபெற்ற, இலங்கை தமிழரசுக் கட்சியின் மூலக் கிளை தெரிவுக் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, எஸ்.சிவமோகன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.


இந்தக் கூட்டத்தை ஒளிப்பதிவு செய்வதற்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு இதன்போது அனுமதி மறுக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அங்கு மோதல் ஏற்பட்டதை அங்கிருந்த ஒருவர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த மோதல் ஆரோக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து அவ்வாறு அமைந்திருந்தாலும், கூட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் மோதல் வீதி வரை நீடித்தது.