Sunday, November 5, 2017

How Lanka

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் புத்தளம் பகுதியில் கோர விபத்து


புத்தளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் மதுரங்குளி பகுதியில் குறித்த விபத்து இன்று காலைவேளையில் இடம்பெற்றுள்ளது.


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, மதுரங்குளி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது, குறித்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்துள்ளது.


விபத்தில் காயமடைந்துள்ளவர்கள் புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


குறித்த விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை காயமடைந்தவர்கள் புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.