யேமன் எல்லை அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் சவுதி இளவரசர் மன்சூர் பின் முக்ரின் உயிரிழந்துள்ளார்.
ஹெலிகொப்டர் தரையில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள அசிர் மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் இளவரசர் மன்சூர் பின் முக்ரின்.
அவர் 7 அரச அதிகாரிகளுடன் ஹெலிகொப்டரில் பயணித்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யேமன் எல்லை அருகே குறித்த ஹெலிகொப்டர் காணாமற்போயிருந்த நிலையில், அது தரையில் வீழ்ந்து நொறுங்கியதாக பின்னர் தகவல் வௌியானது.
இந்த விபத்தில் இளவரசர் பலியாகிவிட்டதாக சவுதி அறிவித்துள்ளது.
அவருடன் பயணித்தவர்களின் நிலை குறித்து தகவல் இல்லை.
ஆனால், ஹெலிகொப்டரில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாக சவுதியைச் சேர்ந்த ஓகாஸ் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் பலியான மன்சூர் பின் முக்ரி முன்னாள் முடி இளவரசர் முக்ரின் பின் அப்துல் அஜீஸின் மகன் ஆவார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையிலான ஊழல் தடுப்புக்குழு நேற்று (05) உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்ளிட்ட 11 இளவரசர்களைக் கைது செய்துள்ள நிலையில் இந்த விபத்து நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.