Monday, November 20, 2017

How Lanka

சூடு பிடிக்கும் அரசியல் - இலங்கை சிவசேனை அமைப்பு தேர்தலில்


சைவத்தையும், தமிழையும் காக்கும் வேட்பாளருக்கே வாக்களிக்குமாறு கோரி வவுனியா, செட்டிக்குளத்தின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை சிவசேனை அமைப்பினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியம் காக்க சைவ வாக்காளர்கள் யாவரும், சங்கங்கள், உள்ளூராட்சி சபைகள், மாகாணசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் சைவமும், தமிழும் காக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என சுவரொட்டிகளில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.


இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம்(19) குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு இந்த சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

மேற்படி பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடி விஜயம் செய்த குறித்த குழுவினர் நந்திக்கொடி ஏற்றி வைத்துள்ளதுடன், பொது இடங்கள் சிலவற்றிலும் நந்திக் கொடிகளை ஏற்றி வைத்துள்ளனர்.


இவ்வாறு ஏற்றப்பட்டுள்ள நந்திக் கொடிகளிலொன்று 60 அடி உயரத்தில் பறக்கவிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.