Thursday, November 30, 2017

How Lanka

இலங்கை வான்பரப்பை விட்டு நகரும் தாழமுக்க நிலை


இலங்கையில் அசாதாரண வானிலையை ஏற்படுத்திய தாழமுக்க நிலை இலங்கை வான்பரப்பை விட்டு நகர்ந்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக இன்றைய தினம் மழை வீழ்ச்சி குறைந்து இயல்பு நிலை திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

எனினும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடி மழையும், வடக்கு, வடமத்தி, மத்தி, சப்ரகமுவ, ஊவா, தெற்கு, மேல் மாகாணங்களின் பல்வேறு பிரதேசங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்றும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களிலும் 75 மில்லி மீட்டர் வரையான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இதற்கிடையே நாட்டின் கடற்பிரதேசங்களில் கடுமையான காற்று காரணமாக அலைகள் ஆக்ரோசமாக காணப்படக் கூடும் என்பதால் கடற்தொழிலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளல் நன்று என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்ககடலில் ஒருவாகியுள்ள ஒகி புயல் கன்னியகுமரியில் இருந்து 70 கிலோ மீட்டர் தெற்கு திசையில் மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக வரும் 24மணிநேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதன் காரணமாக கேரள மாநிலத்திலும் குறிப்பாக திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுள்ளது.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை நகரை பொருத்தவரை விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழைப்பு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒகி புயல் எதிரொலியால் குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.