Thursday, November 16, 2017

How Lanka

இந்தியாவுக்கு எதிரான ரெஸ்ட் முக்கிய விக்கெட்களை வீழ்தினார் லக்மல்


சுரங்க லக்மாலின் அபார பந்துவீச்சின் மூலம் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இலங்கை சவாலாக ஆரம்பித்துள்ளது.

6 ஓவர்களை வீசிய சுரங்க லக்மால் ஓர் ஓட்டத்தையேனும் விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் களத்தடுப்பைத் தெரிவு செய்தார்.

என்றாலும், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சுமார் நான்கரை மணித்தியாலங்களுக்குள் தடைப்பட்டது.


காலை 9.30 அளவில் ஆரம்பமாக வேண்டிய போட்டி பிற்பகல் 2 மணியளவிலேயே ஆரம்பமானது.

முதல் பந்துவீச்சிலேயே லோகேஷ் ராகுலை ஆட்டமிழக்கச் செய்த சுரங்க லக்மால் தனது நான்காவது ஓவரில் ஷிகர் தவானையும் வீழ்த்தினார்.

அணித்தலைவர் விராட் கோஹ்லி 11 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைப்பட்டு இன்றைய முதல் நாள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.