Monday, November 13, 2017

How Lanka

பவுண்டின் பெறுமதி டவுண் ஆகிறது காரணம் இதுதான்

பிரித்தானிய பவுண்ட் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க டொலருக்கு எதிராக 1.31 வீதம் பவுண்ட் பெறுமதி வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் தெரசா மேயை பதவியிலிருந்து நீக்குவதற்கு கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் முயற்சிப்பதாக போலியான தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் பவுண்டின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பிரித்தானிய அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கான இறுதி முடிவு இன்னும் எட்டவில்லை.

கடந்த வாரங்களில் உயர்மட்ட அமைச்சர்கள் பதவி விலகலை தொடர்ந்து, சமகால பிரித்தானிய அரசாங்கம் ஆபத்தான நிலைமையில் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த நிலைமை பவுண்ட் பெறுமதியை மேலும் வீழ்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் என பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்கமைய இன்று காலை ஸ்டெர்லிங் பவுண்ட் 0.7 வீதம் குறைவான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.. டொலருக்கு எதிராக 1.3072 என்ற அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளதென புதிதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.