Wednesday, November 1, 2017

How Lanka

போக்குவரத்து பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக வடமாகாணத்தின் இயல்பு நிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 பிரதான வீதியில் கடுமையான மூடுபனி நிலைமை காணப்படுகின்றது.


வவுனியா, மாங்குளம் மற்றும் புளியங்குளம் ஆகிய பிரதேசங்களின் வீதிகளை பனி மூடியுள்ளதாக கூறப்படுகின்றது.இதன் காரணமாக பிரதான வீதியின் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த வீதியின் ஊடாக பயணிப்போர், மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மின்விளக்குகளை ஒளிரவிட்டு வாகனம் செலுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.