2017 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் முடிவடைகின்றது.
அடுத்த வருடத்திற்கான கல்வி நடவடிக்கைக்காக ஜனவரி 2ஆம் திகதி பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் மத்திய நிலையங்களாக செயற்படும் பாடசாலைகள் மீள் ஆரம்பிக்கப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்தது.
அத்துடன், பாடசாலை விடுமுறை தினங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பாடசாலை சூழலை சுத்தப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் தொடர்பில் அவதானமாக இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டது.
இதனடிப்படையில், பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் உள்ள 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் விசேட சிரமதானப் பணிகள் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.