2016 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வட மாகாணம் 4.2 வீத பங்களிப்பை வழங்கியுள்ளது. வட மாகாணத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள மத்திய அரசாங்கம் மேலும் கரிசனை செலுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட உரையில் மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
நாட்டில் வேலையற்றோர் தொகை 4.4 வீதமாகக் காணப்படும் போது, வட மாகாணத்தில் வேலையற்றோர் தொகை 6.3 வீதமாக அமைந்துள்ளது. நாட்டில் தலைக்குரிய வறுமைச்சுட்டி 4.1 வீதமாகக் காணப்படுகின்ற போது, வட மாகாணத்தில் தலைக்குரிய வறுமைச்சுட்டி 7.7 வீதமாகக் காணப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் தனது வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டார். வட மாகாண சபையின் இன்றைய 112 ஆவது அமர்வின் போது முதலமைச்சர் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிமுக உரையை ஆற்றினார்.






