தேயிலை உட்பட இலங்கையின் விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிகத் தடை விதித்துள்ளது. தடைக்குக் காரணம், ஒரு வண்டு!
ரஷ்யாவில் விற்கப்படும் தேயிலையில் 23 சதவீதமானவை இலங்கைத் தேயிலையே! இதன் மூலம் ஆண்டொன்றுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை இலங்கை வருமானமாகப் பெறுகிறது.
இந்த நிலையில், அண்மையில் அனுப்பப்பட்ட தேயிலைப் பொதியில் ஒரு சிறு வண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்வதற்குத் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது ரஷ்ய அரசு. இந்தத் தடை நாளை மறுதினம் 18ஆம் திகதி முதல் அமுலாகவுள்ளது.