Wednesday, December 13, 2017

How Lanka

விண் கற்கள் பொழிவை இலங்​கையர்கள் இன்றும் அவதானிக்கலாம்


விண்கற்கள் பொழிவை இலங்​கையர்கள் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கோள்மண்டளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தப் பொழிவை, இன்றும் (14) அவதானிக்கலாம்.அந்தப் பொழிவை, நேற்றிரவும் சில இடங்களில் அவதானிக்க கூடியதாக இருந்ததென கோள்மண்டளம் தெரிவித்துள்ளது.

வௌ்ளை, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களிலான ஜெமினிட் விண்கற்கள் பொழிவை, இலங்கையர்கள் இவ்வாண்டில் காணும் இறுதிச் சந்தர்ப்பம் இதுவென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 7ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விண்கற்கள் மழை பெய்யுமெனவும், இதன் உச்சக்கட்டத்தை இன்று (14) அவதானிக்கலாம் எனவும் கோள்மண்டளம் தெரிவித்துள்ளது.



கிழக்கு வானிலும், நள்ளிரவுக்குப் பின்னர் வானத்தின் மத்திய பகுதியிலும், அதிகாலைப் பொழுதில் மேற்கு வானிலும் இந்த விண்கற்கள் பொழிவினை அவதானிக்கலாம்.

மணித்தியாலத்துக்கு 120 விண்கற்கள் விழுவதை அவதானிக்கலாம் எனவும் ​கோள்மண்டளம் குறிப்பிட்டுள்ளது.