Thursday, December 21, 2017

How Lanka

கொழும்பில் உருளைக்கிழங்குடன் சொப்பின் பாக்ஜ அவித்த உணவகம்

கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் உணவு சமைக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. கொள்ளுப்பிட்டிய பகுதியிலுள்ள உணவகத்தில் உருளைக்கிழங்கு அவிக்கும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உருளைக்கிழங்குடன் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பையும் சேர்த்து அவிக்கும் காட்சி அம்பலமாகி உள்ளது.

உணவகத்தில் உணவு பெற்றுக் கொள்ள சென்ற ஒருவர் இரகசியமாக அதனை காணொளியாக பதிவிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இலங்கையில் பொலித்தீன் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் ஆரோக்கியமற்ற பொலித்தீன் பைகளை உணவுடன் சேர்த்து சமைக்கப்படுகின்றமையினால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பல உணவுகள் தயாரிக்கப்படும் அபாய நிலை உள்ளதாக பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.