விசுமடு பகுதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த ஆசியார் ஒருவர் அங்கு கல்வி கற்ற மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம், நேற்று முன்தினம்(09) இடம்பெற்றுள்ளதாகவும், இன்றைய தினம் குறித்த ஆசிரியரை ஊர்தலைவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
எனினும், குறித்த ஆசிரியர் விசாரணைக்கு செல்ல மறுத்துள்ளார். இந்த நிலையில், விசுமடு பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் இன்று இரவு 7.00 மணியவில் அடையாளம் தெரியாத நபர்களினால் தீ மூட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.