முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி சுமார் 75 நாட்கள் கழித்து உயிரிழந்தார். இந்நிலையில், ஜெயலலிதா அவர்கள் மருத்துவ சிகிச்சையின் போது, பழச்சாறு அருந்தும் காணொளி காட்சியினை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர் முன்னிலையில் வெளியிட்டார்.
சசிகலா குடும்பத்தினர் மீது சுமத்தப்படும் பொய் குற்றச்சாட்டுகளை மக்களுக்கு உணர்த்தவே இந்த காணொளியை தற்போது வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரி காட்சி - அச்சு ஊடகங்களுக்கு அளித்துள்ள சுற்றறிக்கையில், இன்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் அவர்களால் வெளியிடப்பட்ட ஜெ. சிகிச்சை பெறும் வீடியோ தேர்தலில் நேரடியாகவோ, மறைமுகவோ தாக்கத்தினை ஏற்படுத்திடக்கூடும் என்பதால் அதனை ஒளிபரப்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் என்பவர் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை வெளியிட்டது ஏன் என்பது குறித்து வெற்றிவேல் கூறியதாவது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளை எழுப்புகின்றனர்.
ஜெயலிதாவை தினம் தினம் அரசும், ஆய்வாளர்களும் கொச்சைப்படுத்தி வருகின்றனர், எனவே சந்தேகத்தை போக்கவே இந்த வீடியோவை வெளியிட்டேன்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பல ஆதாரங்கள் உள்ளன. மேலும் இந்த வீடியோ எடுக்கப்பட்ட திகதியை இப்போது தெரிவிக்க இயலாது, மேலும் இதில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது என கூறியுள்ளார்.
பல தடைகளை தாண்டிதான் நான் தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன், ஜெயலலிதா மறைந்தவுடன் புழழோடு இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம், ஆனால் நாளுக்கு நாள் ஜெயலலிதா குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள்.
இதனை நிறுத்தி விடுவார்கள் என்றுதான் நினைத்தோம், ஆனால் பன்னீர் செல்வம் உட்பட அனைவருமே இந்த சந்தேகங்களை தொடர்ந்து கொண்டே இருப்பதால் வேறு வழியில்லாமல் சந்தேகத்தை போக்கவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அவர் இறந்து 1 1/2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ காட்சிகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.