Wednesday, December 20, 2017

How Lanka

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மீண்டும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


இலங்கையில் வட,கிழக்கு பருவமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு ஆகிய பிரதேசங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடை மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் மாலை நேரங்களில் மழை பெய்யும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 


மலையகத்தில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.


இதனால் நீர்த்தேக்க பகுதிகளின் தாழ்வான பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



சாரதிகளுக்கு எச்சரிக்கை


மலையகத்தில் நுவரெலியா, ஹற்றன் மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் இன்று பனிமூட்டமான காலநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் எச்சரிக்கையுடனும், அவதானத்துடனும் வாகனங்களை செலுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


அதிகமான பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பனி பொழிவிற்கு மாறாக மழையும் பெய்து வருகின்ற நிலையில், வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதால் வேகத்தை குறைத்து பயனிக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.