யாழ்.தெரிவத்தாட்சி அலுவலகரிடம் வேட்பு மனுவை கையளித்த பின்னர் வெளியில் வந்த தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவை ஊடகவியலாளர்கள் வழிமறித்த போது அவருடன் கூட வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் “ எப்பவும் நீங்கள் தான் எங்களை படம் எடுக்கின்றீர்கள், இன்றைக்கு நான் உங்களை படம் எடுக்க போகிறேன் “ என கூறி தனது கையடக்க தொலைபேசியில் ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.