Thursday, December 21, 2017

How Lanka

பேராதனை பல்கலையில் மோசமான பகிடிவதை - மாணவன் வைத்தியசாலையில்

கடுமையான பகிடிவதைக்குள்ளான பேராதனை கலைப்பீட முதலாம்வருட மாணவன் வைத்தியசாலையில்.

கடுமையான பகிடிவதைக்கு இலக்காகிய கண்டி – பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தைச் சேர்ந்த முதல்வருடத்தில் பயிலும் பதுளை – தியத்தலாவ பகுதியைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.


பகிடிவதையுடன் சம்பந்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் மூவர், குறித்த மாணவனை முச்சக்கர வண்டியில் ஏற்றி பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த அந்த மாணவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் இந்த வருட ஆரம்பத்தில் கடுமையான சித்திரவதைகளுடன் கூடிய பகிடிவதைகள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.